×

பாத யாத்திரையில் கூட்டத்தை கண்டு நாய் நடுங்கியதால், உரிமையாளரிடம் தந்து நாய்க்கு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டேன்: நாய் பிஸ்கட் விவகாரத்தில் ராகுல் காந்தி விளக்கம்

டெல்லி: பாத யாத்திரையில் கூட்டத்தை கண்டு நாய் நடுங்கியதால், உரிமையாளரிடம் தந்து நாய்க்கு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டேன் என ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 2வது கட்ட நடை பயணத்தை கடந்த 14ந் தேதி மணிப்பூரில் தொடங்கினார். அவர் தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் ‘பாரத ஒற்றுமை நீதி’ யாத்திரை மேற்கொண்டு வருகிறார். ஜார்க்கண்ட் பாத யாத்திரையின் போது ராகுல்காந்தி சர்ச்சையில் சிக்கினார்.

நாய் சாப்பிட மறுத்த பிஸ்கட்டை அவர் காங்கிரஸ் தொண்டருக்கு கொடுக்கும் வீடியோவை பா.ஜனதா வெளியிட்டு விமர்சனம் செய்தது. இதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி விளக்கமளித்துள்ளார். கூட்டத்தை கண்டு நாய் நடுங்கியதால், உரிமையாளரிடம் தந்து நாய்க்கு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். இந்த சின்ன விஷயத்தை ஏன் பெரிதாக்கினார்கள் என புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

The post பாத யாத்திரையில் கூட்டத்தை கண்டு நாய் நடுங்கியதால், உரிமையாளரிடம் தந்து நாய்க்கு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டேன்: நாய் பிஸ்கட் விவகாரத்தில் ராகுல் காந்தி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Pada Yatra ,Rahul Gandhi ,Delhi ,Congress ,Manipur ,
× RELATED இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது...